செய்திகள்
போக்குவரத்து தொழிலாளர்கள் ஸ்டிரைக்: அமைச்சர்கள் சொந்த மாவட்டங்களில் இருக்கும்படி முதல்வர் வேண்டுகோள்
போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் அமைச்சர்கள் தங்கள் சொந்த மாவட்டங்களில் தங்கியிருக்கும்படி முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை:
13-வது ஊதிய ஒப்பந்தக் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும், ஓய்வூதிய நிலுவைத் தொகையை வழங்க உடனே ரூ.2 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்துக்கழக தொழிற்சங்கத்தினர் மே 15-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்தனர்.
இதையடுத்து அரசுப் போக்குவரத்துக்கழக தொழிற்சங்கத்தினருக்கும் தமிழக அரசுக்கும் இடையே கடந்த சில தினங்களாக 7 சுற்றுகளாக பேச்சுவார்த்தை நடந்தது. இதில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. இறுதியாக நேற்று போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கருடன் நடந்த பேச்சுவார்த்தையிலும் சமரசம் ஏற்படவில்லை.
இதனால் திட்டமிட்டப்படி போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் இன்று காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இதனால், தமிழகம் முழுவதும் பெரும்பாலான அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் வெளியூர்களுக்கு பயணம் செய்வதில் கடும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். போராட்டத்தில் பங்கேற்காத தொழிற்சங்கத்தினர் போலீஸ் பாதுகாப்புடன் பஸ்களை இயக்கி வருகின்றனர்.
இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியுடன் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று அவசர ஆலோசனை நடத்தினார். அப்போது, போக்குவரத்து தொழிலாளர்களின் ஸ்டிரைக்கை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக இருவரும் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், அமைச்சர்கள் அனைவரும் தங்கள் சொந்த மாவட்டத்தில் தங்கியிருக்கும்படி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.