செய்திகள்

ரே‌ஷன் கடைகளை மூடுவதே மத்திய அரசின் நோக்கம்: சீமான்

Published On 2017-10-29 14:02 IST   |   Update On 2017-10-29 14:02:00 IST
ரே‌ஷன் கடைகளை மூடுவதே மத்திய அரசின் நோக்கம் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

கே.கே.நகர்:

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திருச்சி விமான நிலையத்தில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

மத்திய அரசு உணவுக்கான மானியத்தை குறைத்ததால்தான் சர்க்கரை விலை உயர்ந்துள்ளது. உலக வர்த்தக அமைப்பில் கையெழுத்திட்டிருப்பதால் இன்னும் ஏராளமான பொருட்களின் விலை உயரும். இதன் மூலம் ரே‌ஷன் கடைகளைமூடுவதே மத்திய அரசின் நோக்கம்.

பா.ஜக.- விடுதலை சிறுத்தை கட்சியினர் மோதல் அரசியல் நாகரீக மற்ற செயல். இதனை வன்மையாக கண்டிக்கிறேன். முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் ஒற்றுமையாக இருக்கிறார்களா? என்பதை அவர்களை சேர்த்து வைத்தவர்களிடம் தான் கேட்க வேண்டும்.


தமிழகம் முழுவதும் எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழா உற்சாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், மக்கள் திண்டாட்டத்திற்கு ஆளாகியுள்ளனர். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிடும். அதில்எந்தவித மாற்றமும் கிடையாது.அதுவும் தனித்துதான் போட்டியிடுவோம்.

கொதஸ்தலை ஆற்றை நடிகர் கமல் பார்வையிட்டு ஆய்வு செய்தது வரவேற்கத்தக்கது., பாராட்டுக் குரியது.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News