செய்திகள்

ஆர்.கே.நகர் தொகுதியில் கட்சி பெயரை அறிவிப்பேன்: டி.டி.வி.தினகரன்

Published On 2018-03-01 14:50 IST   |   Update On 2018-03-01 14:50:00 IST
ஆர்.கே.நகர் தொகுதியில் கட்சி பெயரை அறிவிப்பேன் என்று டி.டி. வி.தினகரன் எம்.எல்.ஏ கூறியுள்ளார். #T T VDinakaran #RKNagar

ராயபுரம்:

ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ.வான டி.டி. வி.தினகரன் இன்று தனது தொகுதியில் கொருக்குப்பேட்டை கண்ணகி நகரில் நடந்த ஜெயலலிதா பிறந்த நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

நலிவுற்ற பிரிவினருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

ஆர்.கே.நகரில் எனது வெற்றியின் மூலம் 3-வது அத்தியாயத்தை தொடங்கியுள்ளார்கள். அண்ணா தி.மு.க.வை தொடங்கிய போது ராயபுரம் ராபின்சன் பூங்காவில்தான் தனது அத்தியாயத்தை தொடங்கினார்.

என் மீது நம்பிக்கை வைத்து 3-வது அத்தியாயத்தை ஆர். கே.நகர் மக்கள் தொடங்கி இருக்கிறார்கள்.

நான் புதிதாக தொடங்க இருக்கும் கட்சிக்கு 3 பெயர்களை பரிசீலிக்க தேர்தல் கமி‌ஷனில் கொடுத்து இருக்கிறோம். இன்று இதில் தேர்தல் கமி‌ஷன் முடிவு எடுப்பதாக இருந்தது. ஆனால் பல்வேறு காரணங்களால் இதில் தடங்கல் ஏற்பட்டுள்ளது.

விரைவில் கட்சி பெயர் பற்றி தேர்தல் கமி‌ஷன் முடிவு எடுக்கும். கட்சியின் பெயரை ஆர்.கே.நகர் தொகுதியில் வைத்து அறிவிப்பேன்.

இவ்வாறு அவர் பேசி னார். நிகழ்ச்சியில் வெற்றிவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். #T T VDinakaran #RKNagar #tamilnews

Similar News