செய்திகள்
எடப்பாடி பழனிசாமியின் சம்பந்திக்கும், வருமானவரி சோதனைக்கும் தொடர்பு இல்லை- அமைச்சர் டி.ஜெயக்குமார்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சம்பந்திக்கும், வருமானவரி சோதனைக்கும் தொடர்பு இல்லை என்றும் தவறான தகவல்களை பரப்புவது கண்டனத்துக்கு உரியது என்றும் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்து உள்ளார். #Minister #jayakumar #ADMK
சென்னை:
தமிழக மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
வருமானவரித்துறை அதிகாரிகள், தங்களுக்கு கிடைக்கும் தகவலின் அடிப்படையில் வரி ஏய்ப்பு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கண்காணித்து, அதில் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் வருமான வரி சோதனையை நடத்துவது வழக்கம்.
தற்போது வருமானவரி சோதனை மேற்கொள்ளப்பட்டு வரும் ஒப்பந்ததாரர்கள் அனைவரும், பொதுப்பணித்துறையிலோ, நெடுஞ்சாலைத் துறையிலோ, சுகாதாரத்துறையிலோ மற்ற துறைகளிலோ இப்போது ஒப்பந்தம் பதிவு செய்து கொண்டு ஒப்பந்ததாரர்கள் ஆகவில்லை.
கடந்த 25 ஆண்டு காலமாக ஒப்பந்ததாரர்களாக இருந்து வருகின்றனர். அதிலும், தி.மு.க. ஆட்சியில் ரூ.10 ஆயிரம் கோடிக்கு மேலே இதே ஒப்பந்ததாரர்கள் ஒப்பந்தம் எடுத்து இருக்கிறார்கள்.
இப்படி இருக்க, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சம்பந்தி ஒரு தொழில் நடத்தி வரும் நிலையில், வருமானவரி சோதனையை அவருடன் சம்பந்தப்படுத்தி, அவரையும் விசாரணை செய்வதற்காக வருமானவரித் துறையினர் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்றனர் என்று ஒரு தனியார் தொலைக்காட்சியில் செய்தி வந்தது என்பது கண்டிக்கத்தக்க விஷயம்.
உண்மை நிலை இப்படி இருக்க, ஒரு தனியார் தொலைக்காட்சியானது, உண்மைக்கு மாறான தகவலை பொதுமக்களிடம் பரப்பி, வேண்டும் என்றே அ.தி.மு.க.வுக்கும், தமிழக அரசுக்கும் களங்கம் கற்பிக்கின்ற செயலில் ஈடுபட்டுள்ளது. இதை நிச்சயமாக ஏற்க முடியாது. இது கண்டனத்துக்கு உரியது.
இவ்வாறு அவர் கூறினார். #Minister #jayakumar #ADMK #EdappadiPalanisamy

இதற்கு அ.தி.மு.க. தனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. எடப்பாடி பழனிசாமியின் சம்பந்தி வீட்டில் தான் இருக்கிறார். வருமானவரி சோதனைக்கும் அவருக்கும் தொடர்பு இல்லை.