செய்திகள்
சுசுகி GSX-S750: இந்திய வெளியீட்டு தகவல்கள்
ஜப்பான் நாட்டு இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான சுசுகி இந்தியாவில் GSX-S750 மாடலை வெளியிட தயாரபாகி வருகிறது. அதன்படி இந்திய வெளியீடு சார்ந்த தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.
புதுடெல்லி:
ஜப்பான் நாட்டு இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான சுசுகி இந்தியாவில் GSX-S750 மாடல் பைக்கினை வெளயிட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதன்படி 2018 ஆட்டோ எக்ஸ்போவில் சுசுகி GSX-S750 மாடல் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் V-ஸ்டார்ம் 650 மாடலும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. சுசுகி நிறுவனம் முதலில் 750 சிசி மாடலுக்கு முக்கியத்துவம் வழங்கும் என கூறப்படுகிறது.
அந்த வகையில் சுசுகி அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் மாடலான V-ஸ்டார்ம் 650 மார்ச் 2018 வாக்கில் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுசுகியின் இரண்டு மாடல்களும் இந்தியாவிலேயே பொருத்தப்படும் என கூறப்படுகிறது.
சுசுகியின் GSX-S1000 மாடலின் டீடியூன் செய்யப்பட்ட மாடலாக GSX-S750 உருவாக்கப்பட்டுள்ளது. GSX-S1000 போன்ற வடிவைப்பு கொண்டிருக்கும் வேக்கட் மோட்டார்சைக்கிள் 749சிசி லிக்விட்-கூல்டு, இன்லைன் நான்கு-சிலிண்டர் இன்ஜின் கொண்டிருக்கிறது. இந்த இன்ஜின் 113bhp செயல்திறன் மற்றும் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.
முந்தைய மாடலை போன்றே சுசுகி GSX-S750 மாடலிலும் மல்டி-லெவல் டிராக்ஷன் கண்ட்ரோல் சிஸ்டம் மற்றும் ABS போன்ற வசதிகள் வழங்கப்படுகிறது. இத்துடன் KYB சஸ்பென்ஷன் மற்றும் நிசின் பிரேக் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
சுசுகி V-ஸ்டார்ம் 650 மாடலில் 645சிசி லிக்விட்-கூல்டு, V-டுவின் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிளிலும் டிராக்ஷன் கண்ட்ரோல் மற்றும் ABS போன்ற வசதிகள் வழங்கப்படுகிறது. இந்த மாடல் ஸ்டான்டர்டு மற்றும் XT என இரண்டு பதிப்புகளில் வெளியிடப்படுகிறது.