செய்திகள்

இவ்வருடமேனும் நேர்மை பெருகட்டும்: நடிகர் கமல் ஹாசன் புத்தாண்டு வாழ்த்து

Published On 2017-12-31 09:03 IST   |   Update On 2017-12-31 09:03:00 IST
இவ்வருடமேனும் நேர்மை பெருகட்டும் என தனக்கே உரிய பாணியில் நடிகர் கமல் ஹாசன் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இன்று நள்ளிரவுடன் 2017-ம் ஆண்டு முடிந்து 2018-ம் ஆண்டு பிறக்கிறது. இதையொட்டி, முக்கிய நகரங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கோயில்களில் நள்ளிரவு சிறப்பு பூஜைகள் செய்யப்படும். இதனால், மக்கள் கூடும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. புத்தாண்டை முன்னிட்டு ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்தவண்ணம் உள்ளனர். தலைவர்களும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

அவ்வகையில் 2018-ஆங்கிலப்புத்தாண்டு நாளை பிறக்க உள்ளதையொட்டி நடிகர் கமல் ஹாசன் டுவிட்டரில் தனக்கே உரிய பாணியில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

‘புது வருடம் கண்டிப்பாய்ப் பிறந்தே தீரும். புது உணர்வும் பொது நலமும் நம் மனதில் பிறக்க வாழ்த்துக்கள். இவ்வருடமேனும் நேர்மை பெருகட்டும் ஆர்வம் பொங்கட்டும். அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்’ என கமல் தெரிவித்துள்ளர்.

Similar News