திருமண விழாவில் கேரட் அல்வா சாப்பிட்ட 150 பேர் மருத்துவமனையில் அனுமதி
- திருமண நிகழ்ச்சியில் இரவு விருந்தின்போது சைவம் (ம) அசைவம் இரண்டும் பரிமாறப்பட்டது.
- அனைவரின் நிலையும் நார்மலாக உள்ளதாக என்று தாகுர்த்வாரா தொகுதியின் முன்னாள் தலைவர் கூறினார்.
உத்தரபிரதேச மாநிலம் மொராபாத்தில் தாகுர்த்வாரா காவல் நிலையத்திற்கு உட்பட்ட பரித்நகர் கிராமத்தைச் சேர்ந்த ஆசிரியர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் இரவு விருந்தின்போது சைவம் (ம) அசைவம் இரண்டும் பரிமாறப்பட்டது. உணவுடன் கேரட் அல்வாவும் பரிமாறப்பட்டது.
இரவு உணவு சாப்பிட்ட பிறகு, சில விருந்தினர்கள் வயிற்று வலி மற்றும் வாந்தியால் பாதிக்கப்பட்டனர். அவர்கள் உடனடியாக அருகிலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். விருந்தில் சுமார் 400 விருந்தினர்கள் கலந்துகொண்டனர். அவர்களில் 150 பேருக்கு வயிற்று வலி மற்றும் குமட்டல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மருத்துவமனையில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அனைவரின் நிலையும் நார்மலாக உள்ளதாக என்று தாகுர்த்வாரா தொகுதியின் முன்னாள் தலைவர் கூறினார்.
இனிப்பு உணவை தயாரிக்கும்போது சேர்க்கப்பட்ட கோவா (மாவா) என்ற மூலப்பொருளில் கலப்படம் செய்யப்பட்டதால் அதனை சாப்பிட்டவர்களுக்கு வயிற்று வலி, வாந்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.