செய்திகள்
கம்ப்யூடெக்ஸ் 2017: சாம்சங் நோட்புக் 9 ப்ரோ அறிமுகம்
சாம்சங் நிறுவனத்தின் நோட்புக் 9 சாதனம் கம்ப்யூடெக்ஸ் 2017 விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் எஸ் பென் சாதனமும் வழங்கப்படுகிறது. சாம்சங் நோட்புக் 9 ப்ரோ லேப்டாப்பில் வழங்கப்பட்டுள்ள சிறப்பம்சங்களை தொடர்ந்து பார்ப்போம்.
புதுடெல்லி:
சாம்சங் நிறுவனத்தின் எஸ் பென் ஸ்டைலஸ் ஃபேப்லெட் மற்றும் டேப்லெட் சாதனங்களுக்கு மட்டும் வாடிக்கையாக வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், முதன் முறையாக லேப்டாப்புடன் எஸ் பென் ஸ்டைலஸ் வழங்கப்பட்டுள்ளது.
தற்சமயம் நடைபெற்று வரும் கம்ப்யூடெக்ஸ் 2017 விழாவில் சாம்சங் நிறுவனம் நோட்புக் 9 இரண்டு லேப்டாப்களை அறிமுகம் செய்துள்ளது. இவற்றின் விலை, விற்பனை குறித்து சாம்சங் சார்பில் எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை.
13.3 இன்ச் மற்றும் 15 இன்ச் என இரண்டு வித டிஸ்ப்ளே அளவுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நோட்புக் 9 ப்ரோ என அழைக்கப்படுகிறது. சாம்சங் நோட்புக் 9 ப்ரோ விண்டோஸ் 10 இயங்குதளம் மற்றும் இன்டெல் கோர் i7 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது.
இதுதவிர இரு லேப்டாப்களிலும் ஃபுல் எச்டி 1080x1920 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே, எச்டி கிராபிக்ஸ் 620 சிப் வழங்கப்பட்டுள்ளது. பெரிய திரை கொண்ட மாடலில் ஏ.எம்.டி ரேடியான் RX 540 கிராபிக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
13.3 இன்ச் மாடல் நோட்புக் 9 ப்ரோ, 8 ஜிபி ரேம், மற்றும் 15 இன்ச் மாடலில் 16 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது. இரு மாடல்களிலும் 256 ஜிபி எஸ்.எஸ்.டி. ஸ்டோரேஜ் வழங்கப்பட்டுள்ளது. சாம்சங் நோட்புக் 9 ப்ரோ, புதிய எஸ் பென் ஸ்டைலஸ் 0.7 எம்எம் டிப் கொண்டு சுமார் 4000-க்கும் அதிகமான அழுத்தங்களை உணரும் திறன் கொண்டது என சாம்சங் தெரிவித்துள்ளது.
இத்துடன் எஸ் பென் சாதனத்தில் வழங்கப்பட்டள்ள ஏர் கமாண்ட் வசதியின் மூலம் குறிப்பு எடுத்தல், தரவுகளை எடிட் செய்வது மற்றும் வரையவும் முடியும். இத்துடன் புதிய எஸ் பென் விண்டோஸ் இன்க் வொர்க்-ஸ்பேஸ்-உடன் இயக்க முடியும்.
எந்நேரமும் ஆன் செய்யப்பட்டிருக்கும் பென் ஸ்டைலஸ் சாதனத்தை சார்ஜ் செய்ய வேண்டிய அவசியம் கிடையாது என சாம்சங் தெரிவித்துள்ளது. சாம்சங் நோட்புக் 9 ப்ரோ இரண்டு யுஎஸ்பி 3.0 போர்ட், ஒரு யுஎஸ்பி டைப்-சி போர்ட், எச்.டி.எம்.ஐ. போர்ட் மற்றும் மைக்ரோ எஸ்.டி. ஸ்லாட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.