உள்ளூர் செய்திகள்

தருமபுரியில் பெய்த திடீர் மழை

Published On 2023-06-08 10:01 GMT   |   Update On 2023-06-08 10:01 GMT
பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தருமபுரி,

தருமபுரி மாவட்டத்தில், அக்னி நட்சத்திரம் கடந்த, 29-ல் முடிந்த போதும், மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தது. குறிப்பாக நேற்று முன்தினம் மாவட்டத்தில், 101.3 பாரன்ஹீட் வெயில் அளவு பதிவானது. இதனால், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று மாலை, 4 மணிக்கு மேல், தருமபுரி மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் திடீர் மழை பெய்தது. அரை மணி நேரம் வரை பெய்த மழையால், தருமபுரியில் வெயிலின் தாக்கம் குறைந்து, குளிர்ந்த கால நிலை ஏற்பட்டதால், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். அரூர் மற்றும் அச்சல்வாடி, மோப்பிரிப்பட்டி, தொட்டம்பட்டி, வாச்சாத்தி உள்ளிட்ட சுற்று வட்டாரத்தில் பரவலான மழை பெய்தது.

Tags:    

Similar News