உள்ளூர் செய்திகள்

அண்ணா அறிவாலயத்தில் 10-ந்தேதி தி.மு.க. மாணவர் அணி மாவட்ட, மாநில அமைப்பாளர்கள் கூட்டம்

Published On 2025-01-04 08:20 GMT   |   Update On 2025-01-04 08:20 GMT
  • தி.மு.க. மாணவர் அணியின் மாவட்ட, மாநகர, மாநில அமைப்பாளர்கள் கூட்டம்.
  • ஆனந்த், பொன்ராஜ், வி.ஜி. கோகுல், பூர்ணசங்கீதா, வீரமணி ஆகியோர் முன்னிலையில் நடைபெற உள்ளது.

சென்னை:

தி.மு.க. மாணவர் அணி செயலாளர் சி.வி.எம்.பி. எழிலரசன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தி.மு.க. மாணவர் அணியின் மாவட்ட, மாநகர, மாநில அமைப்பாளர்கள் கூட்டம், வருகிற 10-ந்தேதி (வெள்ளிக் கிழமை) மாலை 4.30 மணியளவில், சென்னை, அண்ணா அறிவாலயத்தில், எனது தலைமையில், மாநில மாணவர் அணித் தலைவர் ராஜீவ்காந்தி, இணைச் செயலாளர்கள் சி.ஜெரால்டு, எஸ்.மோகன் மற்றும் துணைச் செயலாளர்கள் மன்னை சோழராஜன், சேலம் தமிழரசன், அதலை செந்தில்குமார், அமுதரசன், ஆனந்த், பொன்ராஜ், வி.ஜி. கோகுல், பூர்ணசங்கீதா, வீரமணி ஆகியோர் முன்னிலையில் நடைபெற உள்ளது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News