உள்ளூர் செய்திகள்

114- வது பிறந்தநாள்-அண்ணா சிலைக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவிப்பு

Published On 2022-09-15 15:58 IST   |   Update On 2022-09-15 15:58:00 IST
  • கட்சி அலுவலகத்தில் கட்சி கொடி ஏற்றி அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த அண்ணாவின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
  • அவினாசி ரோட்டில் உள்ள அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

கோவை

மறைந்த முன்னாள் முதல்- அமைச்சர் அண்ணாவின் 114 வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது.

இதனையொட்டி கோவை மாநகர் மாவட்ட அ.தி.மு.க.வினர் மாநகர் மாவட்ட செயலாளர் அம்மன் அர்ச்சுணன் எம்.எல்.ஏ. தலைமையில் கட்சி தலைமை அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக சென்று அவினாசி ரோட்டில் உள்ள அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பின்னர் கட்சி அலுவலகத்தில் கட்சி கொடி ஏற்றி அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த அண்ணாவின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

இதில் முன்னாள் அமைச்சர் செ.ம. வேலுசாமி, மாநகர மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் கே. ஆர். ஜெயராம் எம்.எல்.ஏ., அவைத் தலைவர் சிங்கை முத்து, பகுதி செயலாளர் காலனி ராஜ்குமார், காலனி கருப்பையா, கவுன்சிலர் பிரபாகரன் உள்பட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.  

Tags:    

Similar News