உள்ளூர் செய்திகள்

மதுரை மாவட்டம் முழுவதும் நேரக்கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்ததாக 199 வழக்குகள் பதிவு

Published On 2023-11-13 11:14 GMT   |   Update On 2023-11-13 11:14 GMT
  • நாடு முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
  • காவல்துறை எல்லைக்கு உட்பட்ட புறநகர் பகுதிகளில் 58 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

மதுரை:

நாடு முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அப்போது பொதுமக்கள் பட்டாசுகளை வெடித்து மகிழ்ந்தனர். முன்னதாக தீபாவளி தினத்தன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் என 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்ற தமிழக அரசு நேரக்கட்டுப்பாடு விதிருந்தது.

மதுரை மாநகர் பகுதியில் அரசு அனுமதித்த நேர கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்ததாக 141 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதே போன்று நேரக்கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்ததாக மாவட்ட காவல்துறை எல்கைக்கு உட்பட்ட புறநகர் பகுதிகளில் 58 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

மொத்தத்தில் மதுரை மாவட்டம் முழுவதும் 199 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புறநகர் பகுதிகளில் உசிலம்பட்டி, மேலூர், வாடிப்பட்டி, திருமங்கலம் ஆகிய பகுதிகளிலும், மாநகரில் விளக்குத்தூண், ஜெய் ஹிந்த்புரம், எஸ்.எஸ்.காலனி, திடீர்நகர், திலகர் திடல் உள்ளிட்ட பகுதிகளிலும் அதிகளவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News