உள்ளூர் செய்திகள்
கச்சிராயப்பாளையம் அருகே கள்ளச்சாராயம் கடத்த பயன்பட்ட 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
- போலீசார் கச்சிராயப்பாளையம் அருகே மட்டப்பாறை சோதனைச் சாவடியில் வாகன சோதனை ஈடுபட்டனர்.
- லாரி ட்யூபில் சுமார் 180 லிட்டர் கள்ளச்சாரயத்தை கடத்தி வந்தது தெரிந்தது
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் தாரணேஸ்வரி தலைமையிலான போலீசார் கச்சிராயப்பாளையம் அருகே மட்டப்பாறை சோதனைச் சாவடியில் வாகன சோதனை ஈடுபட்டனர். அப்போது போலீசாரை கண்டதும் 2 மோட்டார் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் வாகனத்தை கீழே போட்டுவிட்டு தப்பி ஓடினர். அப்போது போலீசார் வாகனத்தை சோதனை செய்த போது லாரி ட்யூபில் சுமார் 180 லிட்டர் கள்ளச்சாரயத்தை கடத்தி வந்தது தெரிந்தது.
இதனை தொடர்ந்து கள்ளச்சாராயத்தை போலீசார் சம்பவ இடத்திலேயே அழித்தனர். தொடர்நது மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்த போலீசார் தலைமறைவான குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.