செய்திகள்

பொன்னேரி அருகே வீட்டு பூட்டை உடைத்து நகை - பணம் கொள்ளை

Published On 2016-05-28 06:16 GMT   |   Update On 2016-05-28 06:16 GMT
பென்னேரி அருகே பழவேற்காட்டில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
பொன்னேரி:

பொன்னேரியை அடுத்த பழவேற்காடு கிராமத்தை சேர்ந்தவர் மஸ்தான். பழவேற்காடு பஜாரில் ஓட்டல் நடத்தி வருகிறார். இவர் குடும்பத்தினருடன் தர்மபுரி தர்காவுக்கு சென்றார்.

நேற்று வீடு திரும்பிய போது வீட்டு கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 5 சவரன் நகை, 15 ஆயிரம் பணம் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.

இது குறித்து மஸ்தான் அளித்த புகாரின் பேரில் திருப்பாலைவனம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News