செய்திகள்
விக்கிரவாண்டி அருகே கோதண்டராமர் கோவிலில் 2 கிலோ வெள்ளிப்பொருட்கள் திருட்டு

விக்கிரவாண்டி அருகே கோதண்டராமர் கோவிலில் 2 கிலோ வெள்ளிப்பொருட்கள் திருட்டு

Published On 2016-06-06 16:26 IST   |   Update On 2016-06-06 16:26:00 IST
விக்கிரவாண்டி அருகே கோதண்டராமர் கோவிலின் பூட்டை உடைத்து 2 கிலோ வெள்ளிப்பொருட்கள் கொள்ளை போன சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விக்கிரவாண்டி:

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள காடாம்புலியூர் கிராமத்தில் கோதண்ட ராமர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பட்டாச் சாரியராக ஜானகிராமன் இருந்து வருகிறார். இவர் நேற்று காலை 8 மணியளவில் கோவில் நடையை திறந்து பூஜை செய்தார்.

பின்னர் 11 மணியளவில் கோவிலின் நடையை சாத்திவிட்டு வீட்டிற்கு சென்றார். மீண்டும் மாலையில் பூஜை செய்ய வந்தார்.

அப்போது கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதைப்பார்த்த ஜானகி ராமன் அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது சாமி பீடத்தில் இருந்த 2 கிலோ வெள்ளிப்பொருட்கள் மாயமாகி இருந்தது.

இதுகுறித்து ஜானகி ராமன் விக்கிரவாண்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர். மேலும் பட்டப்பகலில் கோவிலின் பூட்டை உடைத்து 2 கிலோ வெள்ளிப்பொருட்கள் கொள்ளை போன சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News