செய்திகள்

கோவையில் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை: உருக்கமான கடிதம் சிக்கியது

Published On 2016-06-06 16:52 IST   |   Update On 2016-06-06 16:52:00 IST
கோவையில் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை:

கோவை கணபதி ஆவாரம்பாளையம் ரோடு குறதோட்டம் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவர் ஊட்டியில் பொதுப்பணித்துறை என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் அஸ்வின் பாலாஜி (வயது 21). இவர் தனது தாத்தா வீட்டில் தங்கியிருந்து சரவணம் பட்டியில் உள்ள ஒரு கல்லூரியில் என்ஜினீயரிங் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று இரவு அஸ்வின் பாலாஜி, தாத்தாவிடம் தனது நண்பனை பார்க்க செல்வதாக கூறி விட்டு வெளியே புறப்பட்டு சென்றார்.

அஸ்வின் பாலாஜியின் தாத்தா இன்று காலை எழுந்து பாத்ரூமுக்கு சென்றார். அப்போது அங்கு தூக்கில் அஸ்வின் பாலாஜி பிணமாக தொங்கினார்.

பேரனின் உடலை பார்த்து அவர் கதறி அழுதார்.

இந்த சம்பவம் பற்றி சரவணம்பட்டி போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

அப்போது அஸ்வின் பாலாஜி பையில் உருக்கமான கடிதத்தை போலீசார் கைப்பற்றினர்.

அந்த கடிதத்தில் அவர் எழுதியிருப்பதாவது:-

அம்மா.. மன்னித்து விடுங்கள்

எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை. நானாக இந்த முடிவை எடுத்துள்ளேன். அம்மா! என்னை மன்னித்து விடுங்கள். உங்களை விட்டு செல்ல எனக்கு வருத்தமாக உள்ளது.

எனது வங்கி கணக்கில் கொஞ்சம் பணம் உள்ளது. அதை எடுத்து கொள்ளுங்கள். மணி பர்சில் ரூ.6200 பணம் வைத்துள்ளேன். அதையும் வைத்து கொள்ளுங்கள். நான் யாருக்கும் பாரமாக இருக்க விரும்பவில்லை’’

இவ்வாறு அவர் கடிதத்தில் எழுதியுள்ளார்.

Similar News