செய்திகள்
ஆதார் அட்டை கணக்கெடுக்க வந்ததாக கூறி நகை திருடிய இளம்பெண்ணின் காதலனை பிடிக்க வேட்டை
ஆம்பூர் அருகே ஆதார் அட்டை கணக்கெடுக்க வந்ததாக கூறி நகை திருடிய இளம்பெண்ணின் காதலனை பிடிக்க போலீசார் தீவிர வேட்டையில் இறங்கியுள்ளனர்.
ஆம்பூர்:
ஆம்பூர் அருகே உள்ள மாராப்பட்டு பகுதியை சேர்ந்தவர் குமரேசன் (வயது45). இவருடைய மனைவி கீதா. மகள் திவ்யா (வயது 20). இவர், அதே பகுதியில் உள்ள அட்டை கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். திவ்யாவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு, திருமண ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
இதற்காக பெற்றோர் நகை மற்றும் சீர்வரிசை பொருட்களை வாங்கி வைத்துள்ளனர். கீதாவுக்கு திடீரென உடல்நிலை பாதித்தது. சிகிச்சைக்காக அவரை, கணவர் குமரேசன் வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு நேற்று அழைத்துச் சென்றார். இதனால் புதுப்பெண் திவ்யா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.
அப்போது, 20 வயது மதிக்கத்தக்க டிப்-டாப் உடை அணிந்த இளம்பெண் ஒருவர், அந்த பகுதியில் ஆதார் அட்டை எடுத்தவர்கள் குறித்து ஆய்வு செய்வதாக கூறி, வீடு, வீடாக சென்று விசாரித்து கொண்டிருந்தார். திவ்யா வீட்டுக்குள் அந்த இளம்பெண் சென்றார். திவ்யாவிடம், ஆதார் அட்டை சரிபார்ப்பதாக கூறி அந்த பெண் பேச்சு கொடுத்தார்.
திவ்யாவும் அவர் சொல்வதை கேட்டார். தனக்கு திருமணம் நடக்க இருப்பதையும் தெரிவித்தார். இதைகேட்ட இளம்பெண் திருமண உதவித்தொகை பெற எவ்வளவு நகை உள்ளது என்று கேட்டு நகையை காட்டும்படி கூறினார். திவ்யாவும் வீட்டில் இருந்த நகைகளை எடுத்துக்காட்டினார்.
அப்போது அந்த பெண் திவ்யாவிடம் பேப்பர் வாங்கி வரச்சொன்னார். திவ்யா கடைக்கு சென்று வருவதற்குள் 17 பவுன் நகையுடன் இளம்பெண் மாயமானார்.
இதுகுறித்து ஆம்பூர் தாலுகா போலீசில் புகார் அளிக்கப்பட்டது. விசாரணையில், ஆம்பூர் அடுத்த சான்றோர் குப்பம் ஆதி திராவிடர் காலனியை சேர்ந்த அனுசியா (வயது20) நகை திருடியது தெரியவந்தது. அனுசியாவை போலீசார் கைது செய்தனர்.
திருடிய நகைகளை ஆம்பூர் நகைக்கடை பஜாரில் உள்ள அடகுக் கடையில் வைத்து பணம் வாங்கியதாக கூறினார்.
அனுசுயா அடகு வைத்ததாக கூறிய அடகுக் கடைக்கு ஆம்பூர் தாலுகா போலீசார் சென்று விசாரணை நடத்தியபோது யாரும் நகைகளை அடகு வைக்கவில்லை. திருட்டு நகை எனக்கூறி போலீசார் அடிக்கடி விசாரணை என்ற பெயரில் இங்கு வருதை கண்டிக்கிறோம் எனக்கூறி நகைக்கடை உரிமையாளர்கள் சங்கத்தினர் போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர்.
இதையடுத்து போலீஸ் நிலையம் வரும்படி அடகுக்கடை உரிமையாளரை போலீசார் அழைத்தனர். சங்கம் சார்பில் அனைவரும் விசாரணைக்கு வருகிறோம் எனக்கூறினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து அனுசுயா அடகு வைத்திருந்த 5 பவுன் நகை உள்பட 17 பவுன் நகையையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தப்பட்ட அனுசுயா மைனர் பெண் என்பதால் அவரை வேலூர் காப்பகத்தில் தங்கவைக்க உத்தரவிடப்பட்டது. அதன்படி அனுசியா வேலூர் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
அனுசியாவிடம் ஏமாந்ததாக கூறி மூதாட்டி ஒருவர் போலீஸ் நிலையம் வந்தார். உமராபாத் அருகே உள்ள கைலாசகிரி கிராமத்தை சேர்ந்த அந்த முதாட்டியிடம் முதியோர் உதவி தொகை கணக்கெடுப்பு நடத்துவதாக கூறி அனுசியா ரூ.20 ஆயிரம் பணம் திருடி சென்றுள்ளார்.
இதே போல குடியாத்தம் திருப்பத்தூர், வாணியம்பாடி பகுதிகளிலும் அனுசியா கைவரிசை காட்டியது தெரிய வந்துள்ளது.
அனுசியாவுக்கு அவரது காதலன் மற்றும் ஒரு ஆட்டோ டிரைவர் உடந்தையாக இருந்துள்ளனர். அவர்களை பிடிக்க போலீசார் தீவிர வேட்டையில் இறங்கியுள்ளனர்.