செய்திகள்

ஈரோடு மாவட்டத்தில் பரவலாக மழை

Published On 2016-06-06 17:48 IST   |   Update On 2016-06-06 17:48:00 IST
ஈரோடு மாவட்டத்தில் நேற்று மாலை குளிர்ந்த காற்றுடன் கருமேகங்கள் திரண்டு மதிமான மழையும், ஒரு சில பகுதியில் கனமான மழையும் பெய்தது.

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் முழுவதும் சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. பகலில் அனல் காற்றுடன் வெயில் கொளுத்தியதால் மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே காலையில் வெயில் கொளுத்தினாலும், மாலையில் குளிர்ந்த காற்றுடன் கருமேகங்கள் திரண்டு மதிமான மழையும், ஒரு சில பகுதியில் கனமான மழையும் பெய்து வருகிறது.

நேற்று இரவு ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் அதிகபட்சமாக 17 மி.மீட்டர் மழை பதிவாகி இருந்தது. இதே போன்று குண்டேரிபள்ளத்தில் 12 மி.மீ, பவானிசாகரில் 9.8 மி.மீ, நம்பியூரில் 8 மி.மீ, கொடுமுடியில் 2 மி.மீ மழை அளவு பதிவாகி இருந்தது.

Similar News