செய்திகள்
அரவக்குறிச்சி அருகே லாரி –பஸ் மோதல்: கண்டக்டர் பலி
அரவக்குறிச்சி அருகே அரசு பஸ் திடீரென லாரியின் பின் புறத்தில் மோதியதில் பஸ் கண்டக்டர் பலியானார். மேலும் பயணிகள் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
அரவக்குறிச்சி:
சேலத்தில் இருந்து மதுரைக்கு அரசு பஸ் நேற்றிரவு புறப்பட்டது. இன்று அதிகாலை அரவக்குறிச்சி மேட்டுப்பட்டி பிரிவு ரோட்டில் பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது பஸ்சின் முன்பு ஆந்திராவிலிருந்து சிவகாசிக்கு சுண்ணாம்பு ஏற்றி கொண்டு மினி லாரி சென்றது.
இந்நிலையில் நிலைதடுமாறிய பஸ், திடீரென லாரியின் பின் புறத்தில் மோதியது. இதில் பஸ்சின் முன்னால் இருந்த கண்டக்டர் மதுரை உசிலம்பட்டியை சேர்ந்த வைரமுத்து (வயது 29), என்பவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். மேலும் பயணிகள் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
அவர்களை பொதுமக்கள்மீட்டு கரூர் தனியார்ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். விபத்து குறித்து அரவக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.