செய்திகள்
தற்கொலை செய்துகொண்ட விவசாயி குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க அன்புமணி ராமதாஸ் கோரிக்கை
மழையால் பயிர்கள் பாதிக்கப்பட்டதால் தற்கொலை செய்துகொண்ட விவசாயி குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கக்கோரி அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
சென்னை:
பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திருவாரூர் மாவட்டம் சோத்திரியம் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்ற விவசாயி விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார் என்பதை அறிந்து பேரதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். பருத்திப் பயிர்கள் மழையால் பாதிக்கப்பட்டதாலும், கடன் தொல்லையாலும் தான் இம்முடிவுக்கு அவர் தள்ளப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் கடன் தொல்லையால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் 2 ஆயிரத்து 423 உழவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஜெயலலிதா தலைமையிலான புதிய அரசு பதவியேற்ற 10 நாட்களில் ஒரு உழவர் வறுமை மற்றும் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.
தமிழகத்தில் உழவர்கள் வாழ முடியாத சூழல் நிலவுகிறது என்பதற்கான அறிகுறி தான் இதுவாகும். இதை உணர்ந்து உழவர் தற்கொலைக்கு முடிவு கட்ட நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக, வயிற்று வலியால் உழவர் தற்கொலை செய்துகொண்டார் என்று கூறி மூடி மறைக்க முயல்வது சரியல்ல.
தற்கொலை செய்து கொண்ட உழவர் ராஜேந்திரனின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்குவதுடன், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.