செய்திகள்
சிலை கடத்தல் வழக்கில் கைதான தீனதயாளன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல்: பதில் அளிக்க போலீசுக்கு, கோர்ட்டு உத்தரவு
சிலை கடத்தல் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள தீனதயாளன் ஜாமீன் கேட்டு சென்னை மாவட்ட செசன்சு கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவுக்கு பதில்அளிக்கும்படி போலீசாருக்கு, கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை:
சென்னை ஆழ்வார்பேட்டையை சேர்ந்தவர் தீனதயாளன். இவர், ஜாமீன் கேட்டு சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
நான் முறையான உரிமத்தை பெற்று, அபர்ணா ஆர்ட் அண்டு கேலரி என்ற நிறுவனத்தை ஆழ்வார்பேட்டையில் 1964-ம் ஆண்டு முதல் நடத்தி வருகிறேன். என்னுடைய மகளும், மருமகனும் கர்நாடகா மாநிலத்தில் புகழ் பெற்ற டாக்டர்களாக உள்ளனர். என் மகனும், மருமகளும் அமெரிக்காவில் புகழ் பெற்ற ஐ.டி. நிறுவனத்தில் என்ஜினீயர்களாக பணியாற்றுகின்றனர்.
கடந்த மே 30-ந் தேதி என் அலுவலகத்துக்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வந்து சோதனை நடத்தினார்கள். அலுவலக ஊழியர்களை பிடித்துச்சென்று விசாரித்தார்கள். பின்னர் ஜூன் 1-ந் தேதி போலீஸ் விசாரணைக்கு நான் நேரில் ஆஜராகினேன். விசாரணைக்கு முழு ஒத்துழைப்பும் கொடுத்தேன்.
இதன்பின்னர் ஜூன் 21-ந் தேதி போலீசார் சிலை கடத்தல் தடுப்பு சட்டத்தின் கீழ் என்னை கைது செய்து சிறையில் அடைத்தனர். என் மீது பதிவான வழக்கின் முதல் தகவல் அறிக்கையில், கோவில்களில் இருந்து சிலைகள் திருடியாக குற்றச்சாட்டு இல்லை. என் வீட்டில் இருந்தும், குடோனில் இருந்தும் எடுக்கப்பட்ட சிலைகளும் திருடப்பட்டவை என்பதற்கும் ஆதாரம் இல்லை.
என் மீது திருநெல்வேலி மாவட்டம், பழுவூர் போலீசார் கடந்த 2005-ம் ஆண்டு பதிவு செய்த வழக்கு வள்ளியூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது. அந்த வழக்கில் 13 அரசு தரப்பு சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர்கூட எனக்கு எதிராக சாட்சியம் அளிக்கவில்லை. இதனால், கடந்த மார்ச் மாதம் அந்த வழக்கை மீண்டும் விசாரணை நடத்த அனுமதிகேட்டு, வள்ளியூர் கோர்ட்டில் போலீசார் மனு தாக்கல் செய்தனர்.
அதன்பின்னர், 2 மாதம் கழித்து என் வீட்டில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. அதுவும், வள்ளியூர் கோர்ட்டில் மீண்டும் விசாரணை நடத்த அனுமதிகேட்ட போலீஸ் அதிகாரிதான், சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் முக்கிய அதிகாரியாக உள்ளார். நான் 30 நாட்களுக்கு மேலாக சிறையில் இருந்து வருகிறேன். எனவே, எனக்கு ஜாமீன் வழங்கவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
இந்த மனு நீதிபதி ஜி.ஜெயசந்திரன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, மனுவுக்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பதில் மனு தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை 28-ந் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.