செய்திகள்

சேலத்தில் இன்று பரிதாபம்: கட்டுமானப்பணியில் ஈடுபட்ட தொழிலாளி தவறி விழுந்து பலி

Published On 2016-07-23 17:47 IST   |   Update On 2016-07-23 17:48:00 IST
சேலத்தில் கட்டுமானப்பணியில் ஈடுபட்ட தொழிலாளி தவறி விழுந்து பலியான சம்பவம் அப்பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது

கொண்டலாம்பட்டி:

சேலம் அம்மாப்பேட்டை வித்யா நகரை சேர்ந்தவர் லட்சுமி காந்தன்(வயது 46). இவரது வீட்டில் மேல் மாடி அமைகும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த கட்டிட பணியில் சின்னம்மா நாயக்கன் பாளையம், பேளூர் ரோட்டை சேர்ந்த ஜெயராமன் (45) மற்றும், அவரது உறவினர் செந்தில் (34) ஆகியோர் ஈடுபட்டு வந்தனர்.

வழக்கம் போல் இருவரும் இன்று காலையில் கட்டிடம் பணியில் ஈடுபட்டனர். அப்போது பணி செய்வதற்காக அங்கு அமைக்கப்பட்டிருந்த சாரத்தில் ஏறி வேலை செய்யும் போது, ஜெயராமன் தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த அடிப்பட்டது. சிறிது நேரத்தில் அவர் பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், அம்மாப் பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஜெயராமன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இறந்த ஜெயராமனுக்கு மாரியம்மாள்(40) என்ற மனைவியும், ரவி, அய்யந்துரை, விஜய் ஆகிய 3 மகன்களும் உள்ளனர்.

Similar News