செய்திகள்

பனவடலிசத்திரம் அருகே கல்லூரி மாணவி மாயம்

Published On 2016-07-23 19:08 IST   |   Update On 2016-07-23 19:08:00 IST
பனவடலிசத்திரம் அருகே கல்லூரி மாணவி மாயமானது குறித்து பனவடலிசத்திரம் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் மாணவியை தேடி வருகிறார்கள்.

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் தாலுகா பனவடலிசத்திரம் அருகே உள்ள ஆராய்ச்சிபட்டியை சேர்ந்தவர் சீனிப்பாண்டி மகன் கருப்பசாமி (வயது42). இவரின் சகோதரர் வேலுச்சாமி. வேலுச்சாமி கேரளாவில் தங்கி வேலை செய்து வருகிறார்.

இவரின் மகள் மஞ்சுளா (19) ஆராய்ச்சிபட்டியில் உள்ள கருப்பசாமியின் வீட்டில் தங்கியிருந்து அருகில் உள்ள கல்லூரியில் பி.ஏ. படித்து வருகிறார். சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்று விட்டு வருவதாக கூறி சென்றவர் மாலையில் வீடு திரும்பவில்லையாம். பல இடங்களில் தேடியும் கண்டு பிடிக்க முடியவில்லை.

இதனால் சம்பவம் பற்றி கருப்பசாமி பனவடலி சத்திரம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் காணாமல் போன கல்லூரி மாணவியை தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News