செய்திகள்

அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. மரணம்: ஜெயலலிதா இரங்கல்

Published On 2016-07-26 07:38 IST   |   Update On 2016-07-26 07:38:00 IST
அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. நீ.அன்புச்செழியன் மரணத்திற்கு தமிழக முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்
சென்னை:

தமிழக முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதா நேற்று வெளியிட்ட இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

திண்டுக்கல் தொகுதி முன்னாள் எம்.பி.யும், பெரியகுளம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வுமான நீ.அன்புச்செழியன் உடல் நலக்குறைவால் மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றேன்.

அன்புச்செழியனை இழந்து வாடும் அவரது குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.

Similar News