செய்திகள்

ராயபுரம் அருகே மாநகர பஸ் மோதி வாலிபர் பலி

Published On 2016-07-26 12:07 IST   |   Update On 2016-07-26 12:07:00 IST
ராயபுரம் அருகே மாநகர பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்தில் வாலிபர் பலியானார்
ராயபுரம்:

காசிமேடு ஜீவரத்தினம் நகரைசேர்ந்தவர் வீரமணி. இவரது மகன் விக்னேஷ் (22). மீனவர். இவர் அதே பகுதியை சேர்ந்த நண்பர்கள் காளிதாஸ், மதி ஆகியோருடன் ஒரே மோட்டார் சைக்கிளில் சென்றார்.

காசிமேடு சூரிய நாராயணன் தெரு அருகே சென்ற போது உயர் நீதிமன்றத்தில் இருந்து எண்ணூர் நோக்கி சென்ற மாநகர பஸ் (56 என்) திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் பஸ்சின் சக்கரத்தில் சிக்கிய விக்னேஷ் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். காளிதாஸ், மதிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து காசிமேடு போக்குவரத்து இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News