செய்திகள்
தளவாய்புரம் அருகே மின் கம்பத்தில் ஏறி தொழிலாளி தற்கொலை
குடிப்பழக்கத்தை மனைவி கண்டித்ததால் வேதனை அடைந்த தொழிலாளி மின் கம்பத்தில் ஏறி தற்கொலை செய்து கொண்டார்
ராஜபாளையம்:
குடிப்பழக்கத்தை மனைவி கண்டித்ததால் வேதனை அடைந்த தொழிலாளி மின் கம்பத்தில் ஏறி தற்கொலை செய்தார்.
தளவாய்புரம் அருகே உள்ள மாஞ்சோலை காலனியை சேர்ந்தவர் கண்ணன் (வயது27), கூலி தொழிலாளி. இவரது மனைவி இசக்கியம்மாள். குடிப்பழகத்திற்கு அடிமையான கண்ணன் அடிக்கடி மது அருந்தி வந்தார். இதனால் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டது.
நேற்று வழக்கம்போல், கண்ணன் மது குடித்து வர, மனைவி கண்டித்துள்ளார். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த கண்ணன், மதுபோதையில் தனது மாமியார் வீட்டு தெருவில் உள்ள மின் கம்பத்தில் ஏறி மின் கம்பியை பிடித்துள்ளார்.
இதில் தூக்கி வீசப்பட்டு உடல் கருகிய அவரை சிகிச்சைக்காக ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரி கொண்டு சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று இரவு கண்ணன் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து அவரது அண்ணன் பாலமுருகன் கொடுத்த புகாரின்பேரில் தளவாய்புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாமணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.