மத்திய பட்ஜெட்டில் புதிதாக 25 சதவீத வருமான வரி சிலாப் அறிமுகம்?
- நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 8-வது பட்ஜெட் இதுவாகும்.
- மத்திய பட்ஜெட்டில் புதிய மாற்றங்கள் ஏற்படலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
புதுடெல்லி:
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனாதிபதி உரையுடன் வரும் 31-ம் தேதி தொடங்குகிறது. இதைத்தொடர்ந்து, பிப்ரவரி 1-ம் தேதி 2025-26-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். இது நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 8-வது பட்ஜெட் ஆகும்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு 8-வது ஊதியக்குழு ஊதிய உயர்வு உள்ளிட்டவை இந்த பட்ஜெட்டில் இடம் பெறுகிறது. இதனால் மத்திய பட்ஜெட்டில் புதிய மாற்றங்கள் ஏற்படலாம் என்ற பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், மத்திய பட்ஜெட்டில் ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு எந்த வரியும் இல்லை என்ற அறிவிப்பு வெளியிடப்பட இருப்பதாக பிசினஸ் ஸ்டாண்டர்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
அத்துடன், 15 லட்சம் ரூபாய் முதல் 20 லட்சம் ரூபாய் வரையிலான வருமானம் கொண்டவர்களுக்காக 25 சதவீதம் வரி என புதிய வரி விகிதம் கொண்டு வரப்பட வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர்.