மணிப்பூர்: பாஜக-வுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெற்ற ஜே.டி.யு.- மாநிலத் தலைவரை அதிரடியாக நீக்கிய நிதிஷ் குமார்
- தேசிய மக்கள் கட்சி ஏற்கனவே பாஜக ஆட்சிக்கு அளித்திருந்த ஆதரவை திரும்பப் பெற்றது.
- தற்போது நிதிஷ் குமார் கட்சி ஆதரவை திரும்பப் பெற்றுள்ளது.
மணிப்பூரில் பைரேன் சிங் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. பாஜக-வுக்கு நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஆதரவு அளித்து வந்தது. இந்த நிலையில் நிதிஷ் குமார் கட்சி பாஜக-வுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெற்றது.
மணிப்பூரில் நிதிஷ் குமார் கட்சிக்கு ஒரேயொரு எம்.எல்.ஏ பதவிதான் உள்ளது. ஒரு எம்.எல்.ஏ. ஆதரவை இழந்த போதிலும் பைரேன் சிங் ஆட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை.
மத்தியிலும், பீகார் மாநிலத்தில் பா.ஜ.க.-வின் முக்கிய கூட்டணி கட்சியாக நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் விளங்கி வருகிறது. பீகார் மாநிலத்தில் பா.ஜ.க. ஆதரவுடன் நிதிஷ் குமார் ஆட்சி அமைத்துள்ளார். மத்தியில் நிதிஷ் குமார் ஆதரவுடன் பாஜக ஆட்சி அமைத்துள்ளது.
மேகாலயா மாநிலத்தில் ஆட்சி செய்து வரும் தேசிய மக்கள் கட்சி ஏற்கனவே பாஜக ஆட்சிக்கு அதரவு அளித்திருந்த நிலையில், அதை திரும்பப் பெற்றது. இந்த நிலையில் நிதிஷ் குமார் இந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளார்.
2022-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் 6 இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால் ஐந்து எம்.எல்.ஏ.-க்கள் பாஜக-வுக்கு தாவினர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது 60 இடங்களை கொண்ட பாஜக-வுக்கு 37 எம்.எல்.ஏ.-க்கள் உள்ளனர். நாகா மக்கள் முன்னணி கட்சியை சேர்ந்த 5 எம்.எல்.ஏ.-க்கள், மூன்று சுயேட்சை எம்.எல்.ஏ.-க்கள் பாஜக-வுக்கு ஆதரவு கொடுத்துள்ளனர்.
ஐக்கிய ஜனதா தளம் கடசியின் மணிப்பூர் மாநில தலைவர்தான் இதற்கு முக்கிய காரணம் எனக் கூறப்படுகிறது. இதனால் அவரை கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கியுள்ளார் நிதிஷ் குமார்.