இந்தியா

10 வருடம் தலைமைறைவு: முக்கிய நக்சல் தலைவர் சுட்டுக் கொலை- மனைவியுடன் எடுத்த செல்ஃபியால் வந்த சிக்கல்

Published On 2025-01-22 21:07 IST   |   Update On 2025-01-22 21:07:00 IST
  • சலபதி என்று அழைக்கப்படும் ராமச்சந்திர ரெட்டி இயக்கத்தின் முக்கிய 7 தலைவர்களில் ஒருவர் ஆவார்.
  • அதன் பிறகே அவரது தலைக்கு ரூ.1 கோடி பரிசு அறிவிக்கப்பட்டது.

சத்தீஸ்கரில் நடந்து வரும் நக்சல் ஒழிப்பு நடவடிக்கையில் நேற்று 20 நக்சலைட்டுகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

கரியாபண்ட் மாவட்டத்தில் சத்தீஸ்கர்-ஒடிசா எல்லையில் உள்ள மெயின்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காட்டில் திங்கள்கிழமை இரவும் நேற்றும் [செவ்வாய்க்கிழமை] பாதுகாப்புப் படையினருக்கும் நக்சல்களுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது.

கொல்லப்பட்ட நக்சலைட்டுகளில் இரண்டு பெண்களும் அடங்குவர். மேலும் சுட்டுக் கொல்லப்பட்டவர்களில் நக்சலைட்டு இயக்க தலைவர் ஒருவரும் அடங்குவார். அவரது தலைக்கு ரூ.1 கோடி அறிவிக்கப்பட்டு இருந்தது. சலபதி என்று அழைக்கப்படும் ராமச்சந்திர ரெட்டி இயக்கத்தின் முக்கிய 7 தலைவர்களில் ஒருவர் ஆவார்.

இராணுவ வியூகம் மற்றும் கொரில்லா போரில் நிபுணராகக் சலபதி கருதப்படுகிறார். 2004 இல், PWG மற்றும் பிற மாவோயிஸ்ட் குழுக்கள் இணைந்தபோது, சலபதி சிபிஐ (மாவோயிஸ்ட்) இல் உறுப்பினராகி இயக்கத்தில் பெரிய இடத்துக்கு வளரத் தொடங்கினார்.

ஒடிசாவின் கந்தமால் மற்றும் காலாஹண்டி மாவட்டங்களில் சலபதி களத்தில் நக்சல் நடவடிக்கைகளைத் தொடங்கினார். 2011ல், கந்தமால் மாவட்டத்தில் உள்ள போலீஸ் ஆயுதக் கிடங்கில் கொள்ளையடிக்க அவர் மேற்கொண்ட முயற்சி, போலீசாரால் முறியடிக்கப்பட்டது.

தொடர்ந்து ஒடிசா மற்றும் சத்தீஸ்கர் எல்லையில் செயல்பட்ட சலபதி நக்சல் நடவடிக்கைகளில் முக்கிய பங்காற்றினார். 2008 ஆம் ஆண்டு ஒடிசாவின் நயாகர் மாவட்டத்தில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் 13 போலீசார் கொல்லப்பட்டனர். இந்தத் ராமகிருஷ்ணா என்ற தலைவர் திட்டமிட்ட இந்த தாக்குதலை களத்தில் வெற்றிகரமாக நடத்தியவர் சலபதி. 

10 வருடம் தலைமறைவாக வாழ்ந்த சலபதி தனது மனைவி அருணாவுடன் (சைதன்யா வெங்கட் ரவி) காடுகளில் பதுங்கி இருந்ததாக கூறப்படுகிறது. ஒரு நாள் கைவிடப்பட்ட ஸ்மார்ட்போனில் அருணா மற்றும் சலபதியின் செல்ஃபி கண்டுபிடிக்கப்பட்டது.

 

இது 2016 இல் நக்சலைட்டுகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு மீட்கப்பட்டது. இந்த செல்ஃபி அவரது அடையாளத்தை வெளிப்படுத்தியது.

அதன் பிறகே அவரது தலைக்கு ரூ.1 கோடி பரிசு அறிவிக்கப்பட்டது. இறுதியில், இந்த செல்ஃபியை ஒரு தடயமாகப் பயன்படுத்தி, சத்தீஸ்கர்-ஒடிசா எல்லையில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த என்கவுன்டரில் சலபதி கொல்லப்பட்டுள்ளார்.  

Tags:    

Similar News