இந்தியா
VIDEO: 2வது மாடியில் இருந்து சுவரை உடைத்துக்கொண்டு கீழே விழுந்த கார்.. ரிவர்ஸ் கியரால் விபரீதம்
- ஹவுசிங் சொசைட்டிக்குள் இந்த சம்பவம் நடந்துள்ளது.
- ஓட்டுநர் தவறுதலாக ரிவர்ஸ் கியர் போட்டுள்ளார்.
மல்டி லெவல் பார்க்கிங் வளாகத்தில் இரண்டாவது மாடியில் இருந்த கார் சுவரை உடைத்துக்கொண்டு கீழே விழும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள விமன் நகரில் உள்ள ஒரு ஹவுசிங் சொசைட்டிக்குள் கடந்த ஜனவரி 20 அன்று இந்த சம்பவம் நடந்துள்ளது.
அங்குள்ள மல்டி லெவல் பார்க்கிங் வளாகத்தில் இரண்டாவது மாடியில் நிறுத்தப்பட்டிருந்த கார், ஓட்டுநர் தவறுதலாக ரிவர்ஸ் கியர் போட்டதால் பின் பக்கமாக இருந்த சுவரை இடித்துக்கொண்டு கீழே விழுந்துள்ளது.
இந்த சம்பவத்தில் யாருக்கும் பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை என்றாலும், இதுதொடர்பான வீடியோ அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. சுவரின் தரம் குறித்தும், ஓட்டுனரின் அலட்சியப்போக்கு குறித்தும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.