செய்திகள்
மதுவில் வி‌ஷம் கலந்து குடித்து தொழிலாளி பலி

மதுவில் வி‌ஷம் கலந்து குடித்து தொழிலாளி பலி

Published On 2016-07-26 14:44 IST   |   Update On 2016-07-26 14:43:00 IST
மீன்சுருட்டி அருகே குழந்தை இல்லாத கவலையால் மதுவில் வி‌ஷம் கலந்து குடித்து தொழிலாளி பலியான சம்பவம் அப்பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜெயங்கொண்டம்:

ஜெயங்கொண்டம் அருகே உள்ள குழவடையான் கிராமத்தை சேர்ந்த வீரமுத்து மகன் இளஞ்செழியன். இவருக்கு 12 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இதுவரை குழந்தை ஏதும் இல்லாததால் மனமுடைந்து தினமும் குடித்துவிட்டு வந்து தூங்குவது வழக்கமாக கொண்டுள்ளார்.

கடந்த 23–ம் தேதியன்று காலை மனைவி சுமதி(வயது 30) 100–நாள் வேலைக்கு சென்றிருந்த போது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மதுவில் வி‌ஷம் கலந்து குடித்துவிட்டு மயக்க நிலையில் கிடந்துள்ளார். இதை அறிந்து அவரது குடும்பத்தினர் சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்.

இது குறித்து மீன்சுருட்டி போலீஸ் சப்– இன்ஸ்பெக்டர் நமசிவாயம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News