தமிழ்நாடு

திமுகவில் இணைந்த மகள் திவ்யாவிற்கு வீடியோ வெளியிட்டு நடிகர் சத்யராஜ் வாழ்த்து

Published On 2025-01-21 17:56 IST   |   Update On 2025-01-21 17:56:00 IST
  • நடிகர் சத்யராஜின் மகளான திவ்யா தி.மு.க.வில் இணைந்தார்.
  • சமூக நீதி கோட்பாட்டில் சமரசமின்றி வெற்றிநடை போட மனமார வாழ்த்துகிறேன்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், நடிகர் சத்யராஜின் மகளும் – ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ் தி.மு.க.வில் இணைந்தார்.

இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய திவ்யா, "ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் தரும் கட்சி என்றால் அது திமுக, அதற்கு உதாரணம் முதல்வரின் காலை உணவு திட்டம். குறிப்பாக பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் கட்சி என்றால் திமுக தான். அதற்கு உதாரணம் புதுமை பெண்கள் திட்டம். எல்லா மதங்களுக்கும் மரியாதை தரும் ஒரே கட்சி திமுக என்பதால் அக்கட்சியில் இணைந்துள்ளேன்" என்று தெரிவித்த்திருந்தார்.

இந்நிலையில் திமுகவில் இணைந்த மகள் திவ்யாவிற்கு நடிகர் சத்யராஜ் வீடியோ வெளியிட்டு வாழ்த்தியுள்ளார்.

அந்த வீடியோவில், "என் அன்பு மகள் திவ்யா, திராவிட முன்னேற்ற கழகத்தில் தன்னை இணைத்து கொண்டதற்கு என்னுடைய மகிழ்ச்சிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்கிறேன். பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி ஸ்டாலின் அவர்களின் வழியில் சமூக நீதி கோட்பாட்டில் சமரசமின்றி வெற்றிநடை போட மனமார வாழ்த்துகிறேன்" என்று சத்யராஜ் பேசியுள்ளார்.

Tags:    

Similar News