தமிழ்நாடு

ராணிப்பேட்டையில் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார் உற்பத்தி ஆலை அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி

Published On 2025-01-21 17:33 IST   |   Update On 2025-01-21 17:33:00 IST
  • கார் உற்பத்தி ஆலைக்கு முதல்வர் ஸ்டாலின் கடந்த ஆண்டு செப்டம்பர் 28-ம் தேதி அடிக்கல் நாட்டினார்.
  • இதன்மூலம் 5 ஆண்டுகளில் 5,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை:

ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் அமையும் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார் உற்பத்தி ஆலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு செப்டம்பர் 28-ம் தேதி அடிக்கல் நாட்டினார்.

இந்நிலையில், பனப்பாக்கத்தில் அமைய உள்ள டாடா நிறுவனத்தின் லேண்ட் ரோவர் கார் உற்பத்தி ஆலைக்கு தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.

முதல் கட்டமாக ₹914 கோடி மதிப்பில் தொழிற்சாலையை அமைக்கிறது டாடா நிறுவனம்.

இதன்மூலம் 5 ஆண்டுகளில் ₹9,000 கோடி முதலீடு மற்றும் 5,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News