செய்திகள்
மேட்டூர் அணை திறப்பு: ஈரோடு காவேரி ஆற்றுக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு
மேட்டூர் அணையில் இருந்து ஆடி 18–க்கும் மற்றும் குடிநீர் தேவைக்கும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
ஈரோடு:
மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்ட தண்ணீர் ஈரோடு மாவட்டத்தின் எல்லை பகுதியான நெரிஞ்சி பேட்டை மற்றும் அம்மா பேட்டை வழியாக பவானி கூடுதுறைக்கு வந்து இன்று காலை ஈரோட்டுக்கு வந்தது.
புது ரத்தம் பாய்ச்சியது போல் ஈரோடு காவிரி ஆற்றில் தண்ணீர் பாய்ந்து சென்று கொண்டிருக்கிறது.
வெறும் பாறைகளாக தெரிந்து ஈரோடு காவிரி ஆற்றில் தண்ணீர் அதிகமாக தற்போது வருவதால் பொதுமக்கள் ஆவலுடன் காவிரி ஆற்றுக்கு சென்று பாய்ந்து செல்லும் தண்ணீரை பார்த்தனர்.