செய்திகள்
திருத்துறைப்பூண்டியில் சித்தராமையா உருவ பொம்மை எரிக்க முயற்சி
திருத்துறைப்பூண்டியில் சித்தராமையா உருவ பொம்மையை எரிக்க முயன்ற 10க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி அண்ணா சாலை அருகில் தமிழக தேவேந்திர குல மக்கள் எழுச்சி இயக்கத்தின் மாநில தலைவர் சிங்கை சரவணசோழன் தலைமையில் கர்நாடக முதல்-அமைச்சர் சித்தராமையா உருவ பொம்மை எரிக்க முயற்சி செய்தனர்.
அதற்குள் பாதுகாப்புக்கு நின்ற திருத்துறைப்பூண்டி இன்ஸ்பெக்டர் அமுதாராணி, சப்-இன்ஸ்பெக்டர் ராமராஜ் மற்றும் ராஜ்குமார் உள்ளிட்டோர் உருவ பொம்மை எரிக்க விடாமல் தடுத்து 10-க்கும் மேற்பட்டடோரை கைது செய்தனர்