செய்திகள்

சென்னையில் போலீசார் வாகன சோதனை: குடிபோதையில் வாகனம் ஓட்டிய 76 பேர் மீது வழக்கு

Published On 2016-08-28 20:34 IST   |   Update On 2016-08-28 20:34:00 IST
சென்னையில் நேற்று போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதில் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 76 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை:

சென்னையில் வாரந்தோறும் சனிக்கிழமை இரவு விடிய, விடிய போலீசார் வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.

அதன்படி, நேற்று நடைபெற்ற போலீசாரின் இரவு வாகன சோதனையில் பழைய குற்றவாளிகள் 111 பேர், குற்ற பின்னணி உடைய 4 பேர் பிடிபட்டனர்.

குடிபோதையில் வாகனம் ஓட்டிய 76 பேர் சிக்கினர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சந்தேகத்தின் பேரில் 381 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

Similar News