செய்திகள்
மீன்சுருட்டி அருகே கோவில் உண்டியல்களை உடைத்து ரூ.10 ஆயிரம் திருட்டு
மீன்சுருட்டி அருகே கோவில் உண்டியல்களை உடைத்து ரூ.10 ஆயிரம் திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே குண்டவெளி கிராமத்தில் செல்லியம்மன் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு கோவில் பூசாரி பாண்டுரெங்கன் பூஜை முடிந்ததும் கோவில் கதவினை சாத்திவிட்டு வீட்டிற்கு சென்றார்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை அப்பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் டீ குடிப்பதற்காக கடைத்தெருவிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது செல்லியம்மன் கோவில் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து அவர் கோவிலின் அறங்காவலர் மணிவண்ணனுக்கு தகவல் தெரிவித்தார். மணிவண்ணன் உள்பட கோவில் நிர்வாகிகள் வந்து பார்த்தபோது, கோவிலில் இருந்த பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன. மேலும் கோவிலின் தனி அறையில் வைக்கப்பட்டிருந்த 2 சில்வர் உண்டியல்கள் காணாமல் போயிருந்தது தெரியவந்தது.
இது குறித்து மீன்சுருட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் குண்டவெளி கிராம முந்திரி தோப்பில் 2 உண்டியல்கள் உடைக்கப்பட்ட நிலையில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று பார்த்தபோது, அந்த உண்டியல்கள் கோவிலில் திருடப்பட்டவை என்பதும், அதிலிருந்த ரூ.10 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு மர்ம நபர்கள் தப்பி சென்றதும் தெரியவந்தது.
மீன்சுருட்டி பகுதியில் கடந்த சில மாதங்களாக இதுபோன்று கோவில் உண்டியல் பணம் திருட்டு போகும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. இதனால் பொதுமக்கள் பீதியடைந்து வருகின்றனர். உண்டியல் திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள் வடமாநிலத்தவரா? அல்லது உள்ளூர் ஆட்களா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, செல்லியம்மன் கோவில் உண்டியல் பணம் திருட்டு போனது குறித்து அறங்காவலர் மணிவண்ணன், மீன்சுருட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு, செய்து உண்டியல் பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.