செய்திகள்

பெரியபாளையத்தில் நெல்அறுவடை எந்திரத்தில் சிக்கி வாலிபர் சாவு

Published On 2016-09-06 12:54 IST   |   Update On 2016-09-06 12:54:00 IST
பெரியபாளையத்தில் நெல் அறுவடை எந்திரத்தில் சிக்கி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
பெரியபாளையம்:

பெரியபாளையம் திருநிலை கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் (35).

இவர் அதே பகுதியில் உள்ள ஒருவரின் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தார்.

நேற்று இரவு அங்கு நெல் அறுவடை செய்யும் பணி நடைபெற்றது. நெல் அறுவடை செய்யும் எந்திரத்தை சோழவரம் நெடுவரம் பாக்கத்தை சேர்ந்த ராம்கி என்பவர் இயக்கினார்.

அப்போது நெல் அறுவடை எந்திரத்தில் வைக்கோல் சிக்கி கொண்டது. அதை ராஜ்குமார் எடுக்க முயற்சி செய்து கொண்டு இருந்தார்.

இதை கவனிக்காத ராம்கி திடீரென நெல் அறுவடை எந்திரத்தை இயக்கினார். இதனால் ராஜ்குமார் எந்திரத்தில் சிக்கி ரத்த வெள்ளத்தில் தூக்கி வீசப்பட்டார்.

இதைப்பார்த்த ராம்கி அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். உடனே அக்கம் பக்கத்தினர் ராஜ்குமாரை மீட்டு சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள்.

இது குறித்து பெரியபாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து தப்பி ஓடிய ராம்கியை தேடி வருகிறார்கள்.

இறந்து போன ராஜ்குமாருக்கு மேனகா என்ற மனைவியும், ஆர்த்தி, நித்தில்லா என்ற 2 பெண் குழந்தைகளும் உள்ளனர்.

Similar News