செய்திகள்

அவினாசி அருகே இன்று அதிகாலை அரசு பஸ்-வேன் மோதல்: 15 பயணிகள் படுகாயம்

Published On 2016-09-06 14:54 IST   |   Update On 2016-09-06 14:54:00 IST
அவினாசி அருகே இன்று அதிகாலை அரசு பஸ்-வேன் மோதியதில் 15 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.
திருப்பூர்:

ஈரோட்டில் இருந்து இன்று அதிகாலை அரசு பஸ் 50 பயணிகளுடன் புறப்பட்டது.

திருப்பூர் ஊத்துக்குழி பல்லக்கவுண்ட வலசு சோதனை சாவடி அருகே வந்தது. அதே நேரத்தில் கோவையில் இருந்து ஈரோட்டுக்கு சீத்தா பழம் ஏற்றிய மினிவேன் வந்தது. கண் இமைக்கும் நேரத்தில் பஸ்சும் வேனும் நேருக்கு நேர் மோதின. இந்த விபத்தில் பஸ்சின் முன் பக்கம் அப்பளம்போல் நொறுக்கியது. இந்த விபத்தில் பயணிகள் மற்றும் வேனில் பயணம் செய்தவர்கள் என்று 15-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

அதிகாலை நேரம் என்பதால் அந்த வழியே பொதுமக்கள் நடமாட்டம் இல்லை. பயணிகள் அலறி சத்தம்போட்டனர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து காயம் அடைந்தவர்களை மீட்டு பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் குறித்து உடனடியாக தெரியவில்லை. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News