செய்திகள்
நான் சார்ந்த சமுதாயத்தை இழிவுபடுத்தியதாகவே கருதுகிறேன்: சபாநாயகர்
மு.க.ஸ்டாலின் பேசிய கருத்து நான் சார்ந்த சமுதாயத்தை இழிவு படுத்துவதாக இருக்கிறது என்று சபாநாயகர் தெரிவித்தார்.
சென்னை:
தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகு நம்பிக்கை தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடந்தது. இந்த வாக்கெடுப்பு முடிவில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவை கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து சபாநாயகர் ப.தனபால் பேசியதாவது:-
இன்றைக்கு காலையில் நடந்த சம்பவத்தை நான் நினைத்துக்கூட பார்க்க விரும்பவில்லை. இருந்தாலும் எதிர்க்கட்சி தலைவர் சட்டசபைக்கு வெளியே நான் நீலிக்கண்ணீர் வடித்ததாக கூறியிருக்கிறார். இதனால் நான் மனதால் பாதிக்கப்பட்டுள்ளேன். மிக, மிக தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த என்னை மிக உயர்ந்த இந்த பதவியில் அமர்த்தியவர் ஜெயலலிதா.
தி.மு.க. உறுப்பினர்கள் தனிப்பட்ட முறையில் என் மீது தாக்குதல் நடத்தியிருந்தால் நான் கவலைப்பட்டு இருக்க மாட்டேன். பேரவை தலைவர் என்ற முறையில் பணியாற்றுகிறேன். அந்த பதவிக்கு மரியாதை இல்லாமல், நான் சார்ந்த சமுதாயத்தை இழிவுபடுத்தும் வகையில் அவர்களது நடவடிக்கை அமைந்து இருக்கிறது.
இந்த தீர்மானத்தை தி.மு.க. எதிர்த்து இருந்தாலும், தீர்மானம் நிறைவேறியிருக்கும். நான் விதிகளின்படி தான் வாக்கெடுப்பு நடத்தியிருக்கிறேன். இங்கு நடந்ததை மக்கள் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் நடந்து கொண்ட விதத்திற்கு நான் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதனை தொடர்ந்து, அவையை ஒத்தி வைப்பதற்கான தீர்மானத்தை அவை முன்னவர் செங்கோட்டையன் கொண்டு வந்தார். அதனை தொடர்ந்து குரல் வாக்கெடுப்பு மூலம் அவை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார்.