செய்திகள்
டி.கல்லுப்பட்டி அருகே குடிபோதையில் பஸ்சில் ரகளை செய்த லாரி டிரைவர் கைது
குடிபோதையில் பஸ்சுக்குள் ரகளை செய்து கண்டக்டர் மற்றும் பயணிகளை கடித்ததாக லாரி டிரைவர் கைது செய்யப்பட்டார்.
பேரையூர்:
மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே உள்ள வன்னி வேலாம் பட்டியைச் சேர்ந்தவர் தங்கமுடி (வயது 45). லாரி டிரைவர்.
இவர், நேற்று கல்லுப் பட்டியில் இருந்து மதுரை வந்த தனியார் பஸ்சில் ஏறியுள்ளார். குடிபோதையில் இருந்த அவர், கண்டக்டர் டிக்கெட் கேட்டபோது அதனை எடுக்க மறுத்து தகராறு செய்துள்ளார்.
மேலும் கண்டக்டர் ராஜ்குமார் (38) மற்றும் 3 பயணிகளை கடித்து காயப்படுத்தியதாகவும் டி.கல்லுப்பட்டி போலீ சாருக்கு தகவல் கொடுக்கப் பட்டது. அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று லாரி டிரைவர் தங்கமுடியை பிடித்து போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர். அங்கும் அவர் தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டதால், போலீசார் கைது செய்தனர்.