செய்திகள்
விவசாயிகள் கடன் தள்ளுபடி: கி.வீரமணி வரவேற்பு
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை வரவேற்பதாக கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சென்னை:
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் நாகமுத்து, முரளிதரன் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று ஆணை பிறப்பித்துள்ளது.
இது மிகவும் வரவேற்கத்தக்கதாகும். இந்தத் தீர்ப்பின் மீது மேல் முறையீடுக்குச் செல்லாமல் தமிழ்நாடு அரசு உயர்நீதிமன்ற ஆணையை செயல்படுத்த வேண்டும்.
ரூ.7000 கோடி விவசாயக் கடன்களை கருணாநிதி முதல்- அமைச்சராக இருந்தபோது, மாநில அரசே அந்த சுமையை ஏற்று தள்ளுபடி செய்தது என்பதை நினைவூட்டுகிறோம். கூட்டுறவுக் கடன்கள் மட்டுமின்றி, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடனையும் தள்ளுபடி செய்ய மத்திய அரசு முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.