செய்திகள்

டி.டி.வி. தினகரனை தொப்பி சின்னத்தில் வெற்றிபெற செய்யுங்கள்: நா.பாலகங்கா பிரசாரம்

Published On 2017-04-04 17:21 IST   |   Update On 2017-04-04 17:21:00 IST
ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் அ.இ.அ.தி.மு.க. அம்மா கட்சி வேட்பாளர் டி.டி.வி. தினகரனை ஆதரித்து வட சென்னை தெற்கு மாவட்ட கழக செயலாளர் நா.பாலகங்கா தொகுதி முழுவதும் பிரசாரம் செய்தார்.

சென்னை:

ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் அ.இ.அ.தி.மு.க. அம்மா கட்சி வேட்பாளர் டி.டி.வி. தினகரனை ஆதரித்து வட சென்னை தெற்கு மாவட்ட கழக செயலாளர் நா.பாலகங்கா தொகுதி முழுவதும் சூறாவளி பிரசாரம் செய்து தொப்பி சின்னத்துக்கு வாக்கு சேகரித்து வருகிறார்.

கொளுத்தும் வெயிலில் வீடுவீடாக சென்று அம்மா ஆட்சியின் சாதனைகளை விளக்கி கூறி பெண்களிடம் தொப்பி சின்னத்துக்கு ஆதரவு திரட்டி வருகிறார். வட சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் நா.பாலகங்கா, இன்று காலை கொருக்குப்பேட்டை 38-வது வார்டு சத்தியமூர்த்தி தெரு பகுதியில் தொப்பி சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார். பிரசாரத்தின் போது, ஆர்.கே. நகரில் அம்மா வின் சாதனை திட்டங்களை மேலும் ஏராளமான அளவில் நடைமுறை படுத்த வெற்றி வேட்பாளர் டி.டி.வி. தினகரனுக்கு தொப்பி சின்னத்தில் வாக்களித்து அதிக வாக்கு வித்தியாச்தில் வெற்றி பெற செய்யுங்கள். அவரால்தான் அம்மா ஆட்சியில் நல்ல திட்டங்களை தொகுதி மக்களுக்கு கொண்டு வரமுடியும். எனவே தினகரனுக்கு வாக்களியுங்கள் என்று பாலகங்கா கேட்டுக் கொண்டார்.

அவருடன் பகுதி செயலா ளர்கள் ராமஜெயம், வி.சுகுமார், கன்னியப்பன், முகமது இம்தியாஸ், எஸ்.எஸ். கோபால், வண்ணை கணபதி, சந்தானகிருஷ்ணன், இருளாண்டி, ரகுமத்து சீமா பசீர், குமாரி நாராயணன், ராஜேஸ்வரி ராவ் உள்பட பலர் சென்று ஆதரவு திரட்டினர்.

Similar News