செய்திகள்

முதுமலை புலிகள் காப்பகத்தில் குடிநீரின்றி 13 யானைகள், 33 மாடுகள் பலி

Published On 2017-04-04 17:25 IST   |   Update On 2017-04-04 17:25:00 IST
தமிழக, கேரள மற்றும் கர்நாடக எல்லையில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் கடும் வறட்சியால் 13 யானைகள், 33 மாடுகள் பரிதாபமாக உயிரிந்தன.
ஊட்டி:

தமிழக, கேரள, கர்நாடக எல்லையில் உள்ளது முதுமலை புலிகள் காப்பகம். இந்த பகுதியில் தற்போது கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் வன விலங்குகள் குடிநீர் மற்றும் உணவு இன்றி தவித்து வருகின்றன.

கடும் வறட்சியால் இதுவரை 13 யானைகள் குடிநீர் மற்றும் உணவு இன்றி பரிதாபமாக இறந்துவிட்டன. மாவநல்லி, மசினகுடி பகுதியில் கடும் வறட்சி மற்றும் அனல் காற்றுக்கு தாக்கப்பிடிக்க முடியாமல் 33 மாடுகள் இறந்து விட்டன.

வறட்சியால் கால்நடைகளுக்கு ஏற்படும் கோமாரி நோய் அந்த பகுதியில் உள்ள விலங்குகளை தாக்கியுள்ளது. கால் நடைகளுக்கு ஏற்பட்டுள்ள கோமாரி நோய் குறித்து கால்நடை டாக்டர்களுக்கு தகவல் தெரிவித்தால் அவர்கள் வருவதில்லை என்று பொதுமக்கள் குறைகூறினர்.

கால்நடைகளை தாக்கிய கோமாரி நோய் வன விலங்குகளுக்கு பரவும் அபாயம் உள்ளதாக வன உயிரின ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

Similar News