செய்திகள்
பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் பெண்கள் காலிக்குடங்களுடன் தர்ணா போராட்டம்
காவிரி குடிநீர் வழங்க கோரி பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் பெண்கள் காலிக்குடங்களுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் நந்தகுமார் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில், பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, பட்டா மாற்றம், தொழில் தொடங்க கடனுதவி, வேலைவாய்ப்பு, வீட்டுமனை பட்டா உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 216 மனுக்களை கலெக்டரிடம் நேரடியாக அளித்தனர்.
பெரம்பலூரை அடுத்த எளம்பலூர் ஊராட்சி சிட்கோ தொழிற்பேட்டை அருகே எம்.ஜி.ஆர். நகர் உள்ளது. இங்கு நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதிக்கு ஊராட்சி மூலம் காவிரி குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அங்கு கடந்த ஒரு மாதமாக குடிநீர் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் நீண்ட தூரம் நடந்து சென்று குடிநீர் எடுத்துவர வேண்டிய நிலை உள்ளது. இந்த நிலையில், அந்த பகுதி பெண்கள் தங்கள் பகுதியில் காவிரி குடிநீர் வழங்க கோரியும், பொது குடிநீர் குழாயை அகற்ற உத்தேசித்து இருப்பதை கைவிட்டு காவிரி குடிநீர் தொடர்ந்து கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும் மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு கொடுக்க காலிக்குடங்களுடன் வந்தனர்.
அப்போது அவர்கள் திடீரென்று கலெக்டர் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து சிறிது நேரம் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் கலெக்டர் நந்தகுமாரை சந்தித்து மனு கொடுத்தனர்.
பொதுமக்களிடம் மனுக் களை பெற்றுக்கொண்ட கலெக்டர் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் குறித்த காலத்திற்குள் மனுக்களின் மீது தக்க நடவடிக்கை மேற்கொண்டு, மனுதாரர்களுக்கு உரிய பதிலை அளிக்குமாறு அறிவுறுத்தினார்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் பாஸ்கரன், உதவி திட்ட அலுவலர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.