செய்திகள்
சென்னை ஐ.ஐ.டி.யில் அனுமதியின்றி போராட்டம் நடத்திய 30-க்கும் மேற்பட்டோர் கைது
சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் அனுமதியின்றி போராட்டம் நடத்திய 30-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை:
கடந்த வெள்ளிக்கிழமை கால்நடை வர்த்தகத்துக்கான விதிமுறையில் மத்திய அரசு மாற்றம் கொண்டு வந்தது. அதன்படி இறைச்சி மற்றும் தோல் பொருள்கள் தயாரிப்புக்காக மாடு, கன்றுக் குட்டி, எருமை, ஒட்டகம் உள்ளிட்ட கால்நடைகளை விற்க மத்திய அரசு தடை விதித்துள்ளது. மேலும் இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்தது.
இதில் இறைச்சிக்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்து வருகின்றன. மத்திய அரசின் இந்த முடிவுக்கு அரசியல் கட்சி பிரபலங்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
கேரளாவில் காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மாட்டிறைச்சித் திருவிழா நடத்தி தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர். மேலும் இளைஞர் காங்கிரஸார் கன்றுக்குட்டியை வெட்டி எதிப்பினை வெளிப்படுத்தினர்.
இந்நிலையில், சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் மாணவர்களில் குறிப்பிட்ட சமூகத்தினர், மாட்டிறைச்சி உண்ணும் திருவிழாவை நடத்தினர். இதில், சுமார் 80-க்கும் அதிகமான மாணவர்கள் கலந்து கொண்டனர். இவர்கள் மாட்டிறைச்சி உணவு வகைகளை ஹோட்டலில் வாங்கிவந்து வளாகத்தின் உள்ளேயே இணைத்து சாப்பிட்டனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சூரஜ் என்ற கேரள மாணவர் மீது இன்று ஒரு குறிப்பிட்ட அங்கத்தினர் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் பலத்த காயங்களுடன் சூரஜ் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சூரஜ் மீதான இந்த தாக்குதலுக்கு, கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதில் தாக்குதல் நடத்தியதாக 7 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து சென்னை ஐஐடி வளாக நுழைவாயில் முன்பு அனுமதியின்றி போராட்டம் நடத்திய 30-க்கும் மேற்பட்ட மாணவர் அமைப்பினர் கைது செய்யப்பட்டனர்.