செய்திகள்
மாட்டு இறைச்சிக்கு தடை: சிறுபான்மையினருக்கு எதிரான சட்டத்தை முறியடிப்போம் - தங்கபாலு
மாட்டு இறைச்சி விவகாரத்தில் காங்கிரஸ் என்றும் சிறுபான்மையினர் பக்கம் இருப்போம். அவர்களுக்கு எதிரான இந்த சட்டத்தை முறியடிப்போம் என தங்கபாலு கூறியுள்ளார்.
சென்னை:
இறைச்சிக்காக மாடுகள் விற்பனை செய்வதற்கு மத்திய அரசு தடை விதித்து உள்ளதை கண்டித்து தமிழக காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு சார்பில் சேப்பாக்கத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
சிறுபான்மை பிரிவு தலைவர் அஸ்லம்பாஷா தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் தங்கபாலு பேசியதாவது:-
மாட்டு இறைச்சிக்கு எதிரான உத்தரவு மக்களுக்கு எதிரானது. மக்களின் அடிப்படை உரிமையை பறிப்பது தனி மனிதனின் உணவுக்கு தடை விதிக்க எந்த அரசுக்கும் அதிகாரம் இல்லை. என்ன சாப்பிடுவது என்பது பற்றி அவரவர்தான் முடிவு செய்ய வேண்டும்.
சிறுபான்மை மக்களை நசுக்கும் விதமாக மோடி கொண்டு வந்துள்ள இந்த சட்டத்தால் ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் வருவாய் இழப்பு ஏற்படும். தொழில்கள் நஷ்டமடையும்.
மதுரை ஐகோர்ட்டு மத்திய அரசின் உத்தரவுக்கு சம்மட்டி அடி கொடுத்துள்ளது. இந்த உத்தரவை வழங்கிய நீதிபதியை வணங்குகிறோம்.
காங்கிரஸ் என்றும் சிறுபான்மையினர் பக்கம் இருப்போம். அவர்களுக்கு எதிரான இந்த சட்டத்தை முறியடிப்போம்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் குமரி அனந்தன், எம்.எல்.ஏ.க்கள் பிரின்ஸ், விஜயதாரணி, முன்னாள் எம்.எல்.ஏ. செல்வ பெருந்தகை, தமிழ்ச்செல்வன், தாமோதரன், ஐஸ்அவுஸ் தியாகு உள்பட பலர் கலந்து கொண்டனர்.