செய்திகள்
குறைவான மார்க் எடுத்ததால் 10-ம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை
செய்யாறு அருகே 10-ம் வகுப்பு தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்த வருத்தத்தில் மாணவி தீக்குளித்து தற்கொல செய்து கொண்டார்.
செய்யாறு:
செய்யாறு அருகே உள்ள சுமங்களி கிராமத்தை சேர்ந்தவர் அலங்காரம் மகள் கோமதி (வயது 17). சமீபத்தில் வெளியான 10-ம் வகுப்பு தேர்வு முடிவில் 298 மதிப்பெண் பெற்றிருந்தார்.
இந்த மார்க் மூலம் 11-ம் வகுப்பில் நினைத்த குரூப் படிக்க முடியாது என்ற விரக்தியில் இருந்தார். சம்பவத்தன்று மனமுடைந்த கோமதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனக்கு தானே மண்எண்ணை ஊற்றி தீ வைத்து கொண்டார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் தீயை அனைத்து கோமதியை செய்யாறு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பின்னர் கிழ்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிக்சை பலனின்றி இறந்தார். மோரணம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சாபுதீன் இது தொடர்பாக வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்.