செய்திகள்

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்: தமிழக அரசு உத்தரவு

Published On 2017-08-19 01:40 IST   |   Update On 2017-08-19 01:40:00 IST
தமிழக அரசின் முக்கிய துறைகளில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சென்னை:

தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

நீலகிரி மாவட்டத்தின் முன்னாள் கலெக்டர் பி.ஷங்கர், பயிற்சி நிறைவடைந்ததைத் தொடர்ந்து செய்தி மற்றும் மக்கள் தொடர்பு இயக்குனராகவும், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறையின் அலுவல் சாரா இணைச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

செய்தி மற்றும் மக்கள் தொடர்பு இயக்குனராகவும், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறையின் அலுவல் சாரா இணைச் செயலாளராகவும், தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. கழகத்தின் மேலாண்மை இயக் குனராகவும் இருந்த ஜெ.குமரகுருபரன், பதிவுத்துறை இன்ஸ்பெக்டர் ஜெனரலாக இடமாற்றம் செய்யப்பட்டார். அவர் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. கழகத்தின் பணிகளையும் தொடர்ந்து கவனிப்பார்.

பொதுத்துறை கூடுதல் செயலாளர் அனு ஜார்ஜ், சர்க்கரை துறை இயக்குனர் மற்றும் தமிழ்நாடு சர்க்கரை கழகத்தின் மேலாண்மை இயக்குனராக பணியிடமாற்றம் செய்யப்பட்டார். பணி நியமனம் மற்றும் பயிற்சியின் முன்னாள் இயக்குனர் சி.சமயமூர்த்தி, கல்வி விடுமுறை நிறைவடைந்ததைத் தொடர்ந்து பொதுத்துறையின் கூடுதல் செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு கனிமங்கள் மேலாண்மை இயக்குனர் மற்றும் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறையின் (பொறுப்பு) செயலாளருமான ஆர்.வெங்கடேசன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறையின் செயலாளராக நியமிக்கப்பட்டார். சர்க்கரைத் துறை கமிஷனர் மற்றும் தமிழ்நாடு சர்க்கரை கழகத்தின் மேலாண்மை இயக்குனர் மகேசன் காசிராஜன், தமிழ்நாடு கனிமங்கள் மேலாண்மை இயக்குனராக இடமாற்றம் செய்யப்பட்டார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Similar News