செய்திகள்

அமைந்தகரையில் கூவம் கரையோரம் இருந்த குடிசை வீடுகள் அகற்றம்

Published On 2017-09-14 15:45 IST   |   Update On 2017-09-14 15:45:00 IST
அமைந்தகரையில் கூவம் ஆற்று கரையோரத்தில் இருந்த 40-க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு குடிசை வீடுகளை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றக்கப்பட்டது.
போரூர்:

அமைந்தகரை, கூவம் ஆற்று கரையோரம் ஏராளமான ஆக்கிரமிப்பு குடிசை வீடுகள் உள்ளன. அவற்றை அப்புறப்படுத்த மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்தனர். இதுபற்றி ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இன்று காலை அமைந்தகரை, கண்ணையா தெருவின் பின் பகுதியில் கூவம் ஆற்று கரையோரத்தில் இருந்த ஆக்கிரமிப்பு வீடுகள் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டன.

மொத்தம் 46 வீடுகள் அப்புறப்படுத்தப்பட்டது. அங்கு தங்கி இருந்தவர்களுக்கு சோழிங்கநல்லூரை அடுத்த பெரும்பாக்கத்தில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வீடு ஒதுக்கப்பட்டு இருந்தது.

இதையடுத்து அனைவரும் வாகனம் மூலம் அங்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களிடம் மாநகராட்சி துணை கமி‌ஷனர் கோவிந்த ராவ், வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.

Similar News